×

ஊரடங்கு தளர்வுகள்: 15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியவுள்ள நிலையில் மேலும் தளர்வுகள் குறித்து 14-ம் தேதி முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் குறித்து வரும் 14 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. சென்னையிலும் கொரோனா வைரஸ் தொற்று கனிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.இதனால், கூடுதல் தளர்வுகள் விதிப்பது தொடர்பாக வரும் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீக்கப்பட்டது.  அனைத்து தினங்களிலும் வழிப்பாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதியுடன் முடியடைய உள்ளது. இந்நிலையில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கில் வேறு எதும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது….

The post ஊரடங்கு தளர்வுகள்: 15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியவுள்ள நிலையில் மேலும் தளர்வுகள் குறித்து 14-ம் தேதி முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammadri Muhammed ,Stalin ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...